சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை

1 mins read
e2d1fa2e-a4b1-43ce-865b-1ab8109c3642
-

வரி செலுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களைக் கோரும் மின்னஞ்சல் மோசடி

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் அனுப்­பி­ய­துபோல் தோற்­ற­ம­ளிக்­கும் மோசடி மின்­னஞ்­சல் குறித்து ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

பொது­மக்­கள் அதன் தொடர்­பில் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

'noreply@u.iras.gov.sg' எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யில் இருந்து அது அனுப்­பப்­பட்­டி­ருக்­கும் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

அந்த மின்­னஞ்­ச­லில் வரி செலுத்­து­வோர் தங்­க­ளின் ஆக அண்­மைய தனிப்­பட்ட விவ­ரங்­களைப் பதி­விட உத­வும் இணைப்பு இடம்­பெற்­றி­ருக்­கும்.

இணைப்பு அடுத்த 12 மணி நேரத்­தில் காலா­வ­தி­யா­கி­வி­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கும்.

'சிங்­கப்­பூர் அர­சாங்­கம்' என்று அதில் கையொப்­பம் இடப்­பட்டு இருக்­கும்.

அத­னைப் பொருட்­ப­டுத்த வேண்­டாம் என்­றும் அந்த இணைப்­பைப் பயன்­ப­டுத்தி தனிப்­பட்ட விவ­ரங்­ளையோ கடன்­பற்று அட்டை அல்­லது வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளையோ சமர்ப்­பிக்க வேண்­டாம் என்றும் அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

அதே­போல் கட்­ட­ணங்­கள் ஏதும் செலுத்த வேண்­டாம் என்­றும் பொதுமக்கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

போலி மின்­னஞ்­சல் குறித்து நேற்று முன்­தி­னம் மாலை தக­வல் கிடைத்­த­தாக ஆணை­யம் சொல்­லிற்று.

யாரும் அதன் மூலம் ஏமாற்­றப்­பட்­ட­தா­கத் தக­வல் இல்லை என்று அது கூறி­யது.

போலி மின்­னஞ்­ச­லால் யாரே­னும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அது­கு­றித்­துக் காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளிக்­கும்­படி ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

தனிப்­பட்ட தக­வல்­களை ஆணை­யம் ஒரு­போ­தும் மின்­னஞ்­சல் வழி­யா­கப் பெறு­வ­தில்லை என்­பதை வரி செலுத்­து­வோ­ருக்கு அது நினை­வு­ப­டுத்­தி­யது.