சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலவச, வரம்பில்லா ‘வைஃபை’ சேவை

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னத்­தின் ‘கிரிஸ்­ஃபி­ளை­யர்’ உறுப்­பி­னர்­க­ளாக இருப்­போர், அதன் விமா­னங்­களில் இக்­கா­னமி, பிரி­மி­யம் இக்­கா­னமி வகுப்­பு­களில் பய­ணம் செய்­யும்­போது வரம்­பற்ற ‘வைஃபை’ இணைய சேவையை இல­வ­ச­மா­கப் பெறு­வர்.

இந்த வசதி வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நடப்­பிற்கு வர­வுள்­ளது.

தன் பய­ணி­கள் விமா­னங்­களில் பய­ணம் செய்­யும்­போது அந்த அனு­ப­வத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் எடுத்­து­வ­ரும் முயற்­சி­களில் இது­வும் ஒன்று என அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி கோ சூன் ஃபோங் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து தனது ‘சுவிட்’, முதல் வகுப்பு, ‘பிஸ்­னஸ்’ வகுப்பு, முன்­னு­ரி­மைப் பய­ணி­கள் சேவை (பிபி­எஸ்) உறுப்­பி­னர்­கள் ஆகிய பய­ணி­க­ளுக்கு விமா­னப் பய­ணத்­தின்­போது இல­வச, வரம்­பற்ற ‘வைஃபை’ சேவையை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் வழங்கி வரு­கிறது.

இக்­கா­னமி, பிரி­மி­யம் இக்­கா­னமி வகுப்­பைச் சேர்ந்த கிரிஸ்­ஃபி­ளை­யர் உறுப்­பி­னர் பய­ணி­களுக்கு முறையே இப்­போது விமா­னத்­தி­னுள் இரண்டு மணி நேர­மும் மூன்று மணி நேர­மும் இல­வச ‘வைஃபை’ சேவை வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

கிரிஸ்­ஃபி­ளை­யர் உறுப்­பி­ன­ராகப் பதி­வு­செய்­து­கொள்ள கட்­ட­ணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

முன்­ன­தாக, மூன்­றரை மணி நேரத்­திற்­கும் மேல் அதி­க­மாக இருக்­கும் பய­ணங்­களில் இன்­று­மு­தல் இக்­கா­னமி வகுப்பு பயணி­க­ளுக்­கும் ‘அப்­ப­டை­சர்’ எனும் பசி­தூண்­டும் உண­வு­கள் மீண்­டும் வழங்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் அறி­வித்­தி­ருந்­தது.

மூன்­றரை மணி நேர­மும் அதற்­கும் மேலான பய­ணங்­களின்­போது இக்­கா­னமி வகுப்­பில் பய­ணம் செய்­வோர்க்­குப் பசி­தூண்­டும் உண­வு­டன் ஒரு ரொட்­டித்­துண்டு, முதன்மை உணவு, பாலா­டைக்­கட்டி, நொறுக்­குத்­தீனி, இனிப்­புப் பண்­டம் ஆகி­ய­வை­யும் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 2019-20 நிதி­யாண்­டைக் காட்­டி­லும் இப்­போது விமா­னங்­களில் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­படும் உண­விற்­காக 20 விழுக்­காடு அதி­கம் செல­வி­டப்­ப­டு­கிறது என்று திரு கோ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!