2022ல் குழந்தைப் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவு

சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு குறைந்தது.

மேலும், 1960க்குப் பிறகு கடந்த ஆண்டு ஆக அதிகமான மரணங்கள் பதிவாகின.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலில், கடந்த ஆண்டு குழந்தை பிறப்பு 7.9 விழுக்காடு குறைந்து 35,605 ஆகப் பதிவானது. 2021ல் இந்த எண்ணிக்கை 38,672ஆக இருந்தது.

கடந்த ஆண்டு 26,891 மரணங்கள் பதிவாகின. ஒப்புநோக்க, 2021ல் பதிவான 24,292 மரணங்களைவிட இது 10.7 விழுக்காடு அதிகம் என்று பிறப்பு, மரண பதிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் மகளிரின் வயது படிப்படியாகக் கூடி வருகிறது. முதல் குழந்தையைப் பெற்றுக்கொண்டோரின் இடைநிலை வயது கடந்த ஆண்டு 31.9ஆக உயர்ந்தது. 2018ல் இது 30.6ஆக இருந்தது.

மாறாக, இதே காலகட்டத்தில் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளைப் பெற்றுக்கொண்டோரின் இடைநிலை வயதில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.

மேலும், முதல் குழந்தையைப் பெற்றுக்கொண்ட தாய்மார்களில் 63.6 விழுக்காட்டினர் பல்கலைக்கழக பட்டக்கல்வியைப் பெற்றிருந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 58 விழுக்காடாக இருந்தது.

கடந்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவாக 1.05ஆகக் குறைந்த நிலையில், சிங்கப்பூரர்களின் திருமணம் செய்துகொள்ளும், பெற்றோராகும் கனவுகளை எட்ட உதவும் திட்டங்களை அரசாங்கம் கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தது.

முதல்முறை குடும்பங்களுக்கும் திருமணமான தம்பதியருக்கும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீட்டு விண்ணப்பங்களில் கூடுதல் முன்னுரிமை அளிப்பது அத்திட்டங்களில் அடங்கும்.

ரொக்க அன்பளிப்புகள், மானியங்கள், அரசாங்க ஆதரவுடன் கூடிய தந்தையர் விடுப்பு நான்கு வாரங்களாக நீட்டிக்கப்படுவது உள்ளிட்டவை இதர நடவடிக்கைகளில் அடங்கும்.

இதனிடையே, விரைவாக மூப்படையும் மக்கள்தொகைக்கு ஏற்ப இறப்பும் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சமூகவியல் நிபுணர் டாக்டர் டான் எர்ன் செர் கூறினார்.

சென்ற 2022ஆம் ஆண்டில் புற்றுநோய்க் கட்டிகள், இதய, ரத்த அழுத்த நோய்களே சிங்கப்பூரில் நிகழ்ந்த இறப்புகளுக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின. பதிவான இறப்புகளில் அந்நோய்களின் பங்களிப்பு 49.5% எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!