சிங்போஸ்ட்டுக்கு $11.9 மி. லாபம்

கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் போஸ்ட் குழுமம் நடைமுறை லாபமாக $11.9 மில்லியன் ஈட்டியுள்ளது.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 11.8 விழுக்காடு அதிகம். 2022 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் சிங்போஸ்ட் $10.6 மில்லியன் லாபம் ஈட்டியது.

வருவாய் $475.2 மில்லியனிலிருந்து 15 விழுக்காடு சரிந்து $404.1 மில்லியனாகக் குறைந்தபோதும் நடைமுறை லாபம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், கடந்த ஆண்டில் $466.3 மில்லியனாக இருந்த நடைமுறைச் செலவுகளும் 16 விழுக்காடு குறைந்து $391.9 மில்லியனானது.

கடந்த 2022 ஏப்ரல்-ஜூன் மாதங்களைக் காட்டிலும் இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் சிங்போஸ்ட் குழுமத்தின் அனைத்துலக அஞ்சல் சேவை லாபகரமானதாக விளங்கியது. விமானவழி அனுப்புகைக் கட்டணம் 37 விழுக்காடு குறைந்தது இதற்கு முக்கியக் காரணம்.

அதே வேளையில், உள்நாட்டு அஞ்சல் சேவை தொடர்ந்து சரிவுகண்டு வருகிறது.

ஒட்டுமொத்தத்தில், சிங்போஸ்ட்டின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 86 விழுக்காடு இப்போது அனைத்துலகச் சேவைகள் மூலம் ஈட்டப்படுகிறது.

இதனிடையே, சிங்போஸ்ட் பங்குவிலை வெள்ளிக்கிழமை 3.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!