சாங்கி சிட்டி பாயிண்ட் கடைத்தொகுதியை $338 மில்லியனுக்கு விற்கவிருப்பதாக ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் டிரஸ்ட் (எஃப்சிடி) தெரிவித்துள்ளது.
சாங்கி பிசினஸ் பார்க் சென்ட்ரல் 1ல் அமைந்திருக்கும் அக்கடைத்தொகுதி, எக்ஸ்போ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி அந்தக் கடைத்தொகுதியின் மதிப்பு $325 மில்லியன் என மதிப்பிடப்பட்டதாகக் கூறிய எஃப்சிடி, விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, கடனை அடைக்கப் பயன்படும் என்று குறிப்பிட்டது.
மூன்று மாடிகளையும் ஒரு அடித்தளத்தையும் கொண்டிருக்கும் சாங்கி சிட்டி பாயிண்ட், 208,453 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அதற்கான 60 ஆண்டுக் குத்தகைக் காலம் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தொடங்கியது.
அந்தக் கடைத்தொகுதியில் ஃபேர்பிரைஸ், டைசோ உள்ளிட்ட 128 கடைகள் அமைந்துள்ளன. 2021 அக்டோபருக்கும் 2022 செப்டம்பர் மாதத்திற்கும் இடையே அங்கு ஏறத்தாழ 7.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் வந்துசென்றதாகக் கூறப்பட்டது.

