அண்மையில் மொரோக்கோவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் 2,900க்கும் மேற்பட்டோர் மாண்டனர், 5,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, மொரோக்கோ சுற்றுலாப் பயணங்களைக் குறைந்தது இரண்டு உள்ளூர் சுற்றுப்பயண முகவைகள் ஒத்திவைத்துள்ளன.
மொரோக்கோவுக்குச் செல்வதாக இருந்த அடுத்த சுற்றுலாப் பயணக் குழு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அங்கு செல்லாது என்றும் அதன் பயணத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் சான் பிரதர்ஸ் டிராவல் நிறுவனம் கூறியது.
இந்தக் குழு வியாழக்கிழமை மொரோக்கோ செல்வதாக இருந்தது.
இம்மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரிலிருந்து பல சுற்றுப்பயணிகள் மொரோக்கோ செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் கூறியது.