லிட்டில் இந்தியா கடையில் ‘டோட்டோ’ வாங்கியவருக்கு $13 மில்லியன் பரிசு

திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 2) நடைபெற்ற ‘டோட்டோ’ குலுக்கலில் ஒரே ஒருவர் $13 மில்லியன் பெறுமானமுள்ள மாபெரும் பரிசுத் தொகையை வென்றார். இந்தத் தொகை, பலரும் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குப் போதுமானது.

சிங்கப்பூரில் ஒரே ‘டோட்டோ’ குலுக்கல் சீட்டைக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை வெல்லப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதை சிங்கப்பூர் பூல்ஸ் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அந்த வெற்றிக் குலுக்கல் சீட்டு ஒருவருக்கு மட்டும் சொந்தமானதா அல்லது சில பேர் அதைப் பகிர்ந்துகொண்டனரா என்பது பற்றித் தெரியவில்லை.

வெற்றி எண்களாக 2, 10, 12, 13, 45, 48 ஆகியவை வந்தன. உபரி எண் 11.

ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகே, புளோக் 681 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ‘ரங்கூன் புரோவிஷன் ஷாப்’ கடையில் அவர் வெற்றிக் குலுக்கல் சீட்டை வாங்கியிருந்தார். அது, ‘குவிக் பிக் சிஸ்டம் 8’ குலுக்கல் சீட்டாகும். அதற்கான விலை $28.

இரண்டாம் பரிசை 25 பேர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் $62,991 மதிப்புடைய பரிசுத் தொகையை வென்றனர். இரண்டாம் பரிசு பெற்ற குலுக்கல் சீட்டுகளில் ஒன்றும் அதே ரேஸ் கோர்ஸ் சாலை கடையில் வாங்கப்பட்டது.

திங்கட்கிழமைக்கு முந்திய மூன்று டோட்டோ குலுக்கலில் (செப்டம்பர் 21, 25, 28 ஆகிய தேதிகள்) எவரும் முதல் பரிசை தட்டிச் செல்லாததால், பரிசுத் தொகையின் மதிப்பு $13,077,918ஆகக் கூடியது.

டோட்டோ விதிகளின்படி, குலுக்கலில் எவரும் முதல் பரிசை வெல்லாவிட்டால், அதற்கான பரிசுத் தொகை அடுத்த குலுக்கலுக்காக ஒதுக்கப்படும்.

திங்கட்கிழமை குலுக்கலுக்காக ஏராளமானோர் குலுக்கல் சீட்டு வாங்க முன்வருவர் என்பதை எதிர்பார்த்து, சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகள் குலுக்கல் தினத்தன்று இரவு 9 மணி வரை திறந்திருந்தன. குலுக்கலை முன்னிட்டு பல கிளைகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

கடைசியாக இவ்வளவு பெரிய பரிசுத் தொகை வழங்கப்பட்டது, செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ குலுக்கலில்தான். அப்போது $12.9 மில்லியன் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொண்ட நால்வருக்கு தலா $3.24 மில்லியன் கிடைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!