ஆர்ச்சர்ட் பொலிவார்டில் குடியிருப்புக்கான நிலம் விற்பனை

நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆர்ச்சர்ட் பொலிவார்டில் உள்ள குடியிருப்புத் தளத்தை விற்பனைக்கு விட்டுள்ளது. ஏலக்குத்தகையின்கீழ் இவற்றை சொத்து மேம்பாட்டாளர்கள் வாங்கலாம்.

உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தத் தளம், ஆணையத்தின் 2023 இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்திற்கு உட்பட்டது.

99 ஆண்டு காலக் குத்தகைக்கான இந்த காலித்தளம் 7,031.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நிலத்தில் வீடுகள் கட்டப்படும். அதேநேரம் எழுப்பப்படும் கட்டடத்தின் முதல்தளம் வர்த்தகங்களுக்கு ஒதுக்கப்படும்.

கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 164 மீட்டர் வரை இருக்கும்.

ஒவ்வொரு தளத்தையும் கணக்கிடும்போது அவற்றின் ஒட்டுமொத்த தரைப் பகுதி 24,611 சதுர மீட்டராக இருக்கும்.

வர்த்தகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பரப்பளவு 500 சதுர மீட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 மே மாதத்திற்குப் பிறகு ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் வெளியிடப்படும் அரசாங்க விற்பனைத் திட்ட நிலப்பகுதி இது.

அண்மையில் திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் ஆர்ச்சர்ட் பொலிவார்ட் எம்ஆர்டி நிலையம் அருகே இந்தக் காலி மனை அமைந்துள்ளது.

இதில் ஏறக்குறைய 280 வீடுகளைக் கட்டலாம் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தில் இடம்பெறும் 5,160 வீடுகளின் ஒரு பகுதி இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!