சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் இடத்தின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க முயற்சி

பார்ப்பதற்கு சிறிய காட்டுப்பகுதியைப்போல இருக்கும் இந்த அடர்த்தியான காட்டுப்பகுதிக்கு அடியில், 1990களில் இருந்து எரிக்கப்பட்ட குப்பை புதைக்கப்பட்டிருக்கிறது என நம்புவதற்கு சற்று கடினம்.

இதுதான் செமக்காவ் குப்பை நிரப்பும் இடம். 1995ல் கட்டப்பட்ட இது செமக்காவ் தீவு, சக்கேங் தீவு இரண்டையும் இணைத்து அவற்றுக்கு இடையேயான கடற்பகுதி இடைவெளியைக் குறைத்து அமைக்கப்பட்டது.

மொத்தம் 178 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ள செமக்காவ் குப்பை நிரப்பும் இடத்தில் முதற்கட்டத்தில் 11 பகுதிகள் உள்ளன. 1999ல் செயல்படத் தொடங்கிய முதற்கட்டத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் குப்பைகளால் நிரப்பப்பட்டுவிட்டன. அவற்றுக்குமேல் வளர்ந்து புல்லும் மரங்களும் பச்சை பசுமையான தோற்றத்தைக் காட்டுகின்றன.

செமக்காவின் இரண்டாம் கட்டம் மொத்தம் 157 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2015ல் செயல்படத் தொடங்கிய அதில் ஏறக்குறைய 10 விழுக்காட்டு பகுதி நிரம்பிவிட்டது.

அதாவது, சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் இடமான செமக்காவில் பாதியளவுக்கும் குறைவான பகுதியே இன்னும் குப்பையால் நிரப்பப்படவில்லை.

தற்போதைய குப்பை வீசும் பழக்கத்தின் அடிப்படையில், இன்னும் 12 ஆண்டுகளில் செமக்காவ் முழுமையாக நிரப்பப்பட்டுவிடும். செமக்காவ் 28 மில்லியன் கன மீட்டர் கழிவை ஏற்கும் ஆற்றல் உடையது.

செமக்காவின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க வெவ்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி விகிதத்தை அதிகரிப்பதே பலருக்கும் தெரிந்த உத்தி. ஆனால், சிங்கப்பூரின் மறுசுழற்சி விகிதம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கடந்த ஆண்டு சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கழிவில் 57 விழுக்காடு அளவு செமக்காவிற்குச் செல்லவில்லை. ஆனால், உள்நாட்டு மறுசுழற்சி விகிதம் 12 விழுக்காடாகக் குறைந்தது. இது, 10 ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!