வேலையின்போது காயமுற்றால் $250 ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகள்

தகுதிபெறும் விநியோகத் தள ஊழியர்கள் தங்களின் வேலையின்போது காயமுற்றால் $250 மதிப்புடைய ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘என்டியுசி கேர்’ நிதித் திட்டத்தின் மூலம் தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கும் டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள், விநியோகத் தள ஊழியர்கள் ஆகியோர் பலன்பெறலாம்.

இக்குறிப்பிட்ட பிரிவினருக்குத் தற்போது நிதியுதவித் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், மற்ற நிவாரணத் திட்டங்களின் மூலம் உதவி கிட்டும்வரை இந்தப் பற்றுச்சீட்டுத் திட்டம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைகளில் நீடித்த நேரத்திற்கு விநியோகத் தள ஊழியர்களும் தனியார் வாகன ஓட்டுநர்களும் டாக்சி ஓட்டுநர்களும் இருப்பதால் அபாயங்களை எதிர்நோக்குகின்றனர். கனமழை போன்ற வேலைக்கு ஒத்துழைக்காத சூழல்களால் அந்த அபாயங்கள் அதிகரிக்கும் சாத்தியமும் உண்டு என்று என்டியுசி குறிப்பிட்டது.

“வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டால், சுயதொழில் செய்யும் இந்த உறுப்பினர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்த பின்னரே அரசாங்கத்திடமிருந்தோ சமூக அமைப்புகளிடமிருந்தோ நிதி உதவி பெறக்கூடும்,” என்றார் என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்.

தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா என்ற கவலை இந்தக் காயமுற்றோரின் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் என்று சுட்டினார் திரு இங்.

விபத்துகள் நேரும்போது இக்குறிப்பிட்ட பிரிவினர் தங்களின் சேமிப்பை நம்பியுள்ளனர். இவர்களுக்குப் பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் சலுகைகள் எதுவும் இல்லை என்றது என்டியுசி.

பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெற, காயமுற்ற ஊழியருக்கு ஐந்து நாள்கள் அல்லது அதற்கு அதிகமான நாள்கள் தொடர்ச்சியாக மருத்துவ விடுப்பு அல்லது மருத்துவமனை விடுப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!