ஏற்றத்தாழ்வைத் தடுக்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கைகொடுக்கும்: அதிபர் தர்மன்

இடைப்பருவ வாழ்க்கைத்தொழில் ஊழியர்களின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கிற்கான புதிய நிரப்புதொகை அறிவிக்கப்பட்டு இருப்பது எல்லா சிங்கப்பூரர்களின் முன்னேற்றத்துக்கும் உதவும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.

ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதைத் தடுக்கவும் அந்த நிரப்புதொகை கைகொடுக்கும் என்று அவர் சனிக்கிழமை பதிவேற்றிய ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.

புதிய திட்டத்தை துணிச்சலான உதவித்தொகுப்பு என்று குறிப்பிட்டுள்ள அதிபர் தர்மன், “சிங்கப்பூரர்கள் மீண்டும் கற்றலுக்குத் திரும்ப உதவும் இத்திட்டம் நமது வருங்காலத்திற்கான மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை,” என்றார்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 16ஆம் தேதி தாக்கல் செய்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 40 வயதும் அதற்கு மேலும் வயதுடைய சிங்கப்பூரர்களின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டது அத்திட்டம்.

சிறந்த வேலைத் திறன்களை வளர்க்கக்கூடிய, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்குப் பயன்படுத்த அவர்களின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் $4,000 நிரப்பப்படும் என்னும் அறிவிப்பும் அத்திட்டத்தில் அடங்கும்.

இளம் சிங்கப்பூரர்களும் 40 வயதை எட்டும்போது இந்த நிரப்புதொகையைப் பெறுவர்.

அதுபற்றிய கருத்துகளை அதிபர் தர்மன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான நாடுகளில் வேலை செய்துகொண்டே கற்பது என்பது மிகவும் சமமற்றதாக உள்ளது என்றார் அவர்.

“நிபுணர்களும் இளம்பருவத்தில் அதிகம் கற்றுக்கொண்டவர்களும்கூட சாதாரண ஊழியர்களைக் காட்டிலும் அதிகம் கற்கிறார்கள். எனவே அவர்கள் மட்டும் முன்னேறிச் செல்கிறார்கள்.

“சிங்கப்பூரில் இந்தப் போக்கை நாம் முறியடிக்க வேண்டும். ஒவ்வோர் ஊழியரின் கற்றலுக்கும் முதலீடு செய்வதன் மூலம் கற்றலை கட்டுப்படியாகக்கூடியதாகவும் எளிதானதாகவும் ஆக்க முடியும்.

“குடும்பத்தை உருவாக்க சில ஆண்டுகளைச் செலவிடுவோர் அல்லது பராமரிப்பாளராக சில காலத்தைச் செலவிடுவோர் புதிய திறன்களுடன் வேலைக்குத் திரும்பி புத்துணர்ச்சியுடன் விளங்க நாம் உதவ வேண்டும்,” என்றார் திரு தர்மன்.

சிங்கப்பூர்கள் நடுத்தர வயதை எட்டும்போது தங்கள் வாழ்க்கைக்கான இரண்டாவது அலையான இந்தக் கற்றல்போக்கைக் கடைப்பிடித்து புதியனவற்றைக் கற்க அதிபர் தமது பதிவில் ஊக்கமூட்டி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!