ஓசிபிசி 4,600 தொடக்க நிலை ஊழியர்களுக்குத் தலா $1,000 வழங்குகிறது

1 mins read
3d87795d-e324-4377-91e6-34cd5139f84d
ஊழியர்கள் இவ்வாண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை வழங்கீடுகளைப் பெறுவார்கள் என்று ஓசிபிசி கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஓசிபிசி வங்கி சிங்கப்பூரில் உள்ள 4,600 தொடக்க நிலை ஊழியர்களுக்குத் தலா $1,000 வழங்குகிறது.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம் தொடர்பான கவலைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுகிறது.

உலக அளவில் ஏறக்குறைய 14,000 தொடக்க நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் கிட்டத்தட்ட $9 மில்லியன் வழங்கீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி அது என்று வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்தத் திட்டம், 19 சந்தைகளில் உள்ள ஓசிபிசி குழுமத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு உதவும்.

ஊழியர்கள் இவ்வாண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை வழங்கீடுகளைப் பெறுவார்கள் என்று ஓசிபிசி கூறியது.

குறிப்புச் சொற்கள்