$12 மி. டோட்டோ குலுக்கல்:நால்வருக்கு தலா $3 மி.

$12 மி. டோட்டோ குலுக்கல்:நால்வருக்கு தலா $3 மி.

1 mins read
6f574dd8-8ad9-49d3-977d-63095a6827b0
தோ பாயோ லோரோங் 1ல் சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் அதிர்ஷ்டச் சீட்டை வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டின் சிறப்பு ‘அங் பாவ்’ டோட்டோ ஜாக்பாட் தொகையான 12 மில்லியன் வெள்ளியை வெற்றி பெற்ற நான்கு பேர் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.

நால்வருக்கும் தலா மூன்று மில்லியன் வெள்ளி கிடைக்கும்.

பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குலுக்கலில் 18, 21, 26, 35, 38, 43 ஆகியன வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்டன. கூடுதல் எண் 40.

வெற்றி பெற்ற இரண்டு சீட்டுகள் புளோக் 106 ஹவ்காங் அவென்யூ 1, புளோக் 508 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52 ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் விற்கப்பட்டன.

வெற்றி பெற்ற இதர இரண்டு சீட்டுகள் ‘ஐடோட்டோ சிஸ்டம் 12’ என்று சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்தது.

இந்தச் சிறப்புக் குலுக்கலுக்கான விற்பனை அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6.10 மணிக்குத் தொடங்கியது.

2023ஆம் ஆண்டில் 12 மில்லியன் டோட்டோ ‘அங் பாவ்’ தொகையை மூன்று பேர் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்