தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய விளையாட்டரங்கில் சில ஆண் கழிவறைகள் பெண் கழிவறைகளாக மாற்றம்

1 mins read
26ea7828-1fe5-411d-83ee-a13b2596b27c
பெண் கழிவறைகளுக்கு வெளியே நீண்ட வரிசை காணப்படுவதால், சில ஆண் கழிவறைகள் தற்காலிகமாக பெண் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. - படம்: மதர்ஷிப்

பிரபல அமெரிக்க இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் மார்ச் மாதம் படைக்கும் ஆறு இசைநிகழ்ச்சிகள் தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றன.

அங்கு கழிவறை விவகாரம் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. ஆனால் அதற்கு இப்போது தீர்வும் காணப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது அதிகமானோர், குறிப்பாக கூடுதலான பெண்கள் ஒன்றுகூடுவதால், பெண் கழிவறைகளுக்கு வெளியே நீண்ட வரிசை காணப்படுவதுண்டு.

இதற்குத் தீர்வுகாண சில ஆண் கழிவறைகள் தற்காலிகமாக பெண் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள முதல் மூன்று டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சிகளைக் காண வந்தோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என மதர்ஷிப் செய்தித் தளத்திடம் பெண் இசைப் பிரியர்கள் கூறினர்.

ஆண் கழிவறைகளைப் பெண் கழிவறைகளாக மாற்ற எடுக்கப்பட்ட முயற்சியை தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்