நகை, பணம் திருடிய பணிப்பெண்ணுக்கு 14 மாதச் சிறை

முதலாளியின் வீட்டிலிருந்து 59 விதமான நகைகளைத் திருடி அவற்றை $23,000க்கு மேல் அடகு வைத்த பணிப்பெண் ஒருவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வியாழக்கிழமையன்று (மார்ச் 21) சுமார்மி என்ற அந்த 50 வயதுப் பணிப்பெண், வீட்டிலிருந்த பொருள்களை திருடிய இரண்டு குற்றச்சாட்டுகளையும், ஊழல், போதைப் பொருள் கடத்தல், மற்ற கடும் குற்றங்கள் (பலன்களைப் பறிமுதல் செய்யும்) சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண் அவரது முதலாளியின் வீட்டில் 10 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த இந்தோனீசியப் பணிப்பெண் முதலாளியின் வீட்டிலிருந்து ரொக்கமாக $10,000க்கு மேல் திருடியும் உள்ளார்.

திருவாட்டி சுமார்மி 2009 அல்லது 2010ஆம் ஆண்டிலிருந்து தம் முதலாளியின் வீட்டில் தங்கி, பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தன் முதலாளியும் அவருடைய மனைவியும் தங்கள் நகைகளைப் பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்ததை சுமார்மி அறிந்தார்.

இதன் தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டு சுமார்மி இரும்பு, உலோகப் பொருள்கள் விற்கும் கடை ஒன்றில் சாதாரண சாவி ஒன்றை வாங்கினார். அதைக் கொண்டு முதலாளியின் மனைவியுடைய பெட்டகத்தில் உள்ள நான்கு பூட்டுகளில் ஒன்றைத் திறக்க முடிந்ததைக் கண்டார்.

பின்னர், மற்ற மூன்று பூட்டுகளைத் திறக்கக்கூடிய சாவிகளை அவர் கண்டெடுத்தார்.

அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பலமுறை சுமார்மி 59 விதமான நகைகளைத் திருடினார். அவற்றை எல்லாம் $23,380க்கு அடகு வைத்தார். இதில் அடகு வைக்கப்பட்ட பல நகைகள் மீட்கப்பட்டபோதிலும் சுமார்மி இழப்பீட்டுத் தொகையாக எதுவும் தன் முதலாளிக்குக் கொடுக்கவில்லை.

2023ஆம் ஆண்டில் சுமார்மி, முதலாளியின் வீட்டிலிருந்து $4,000 பெறுமானமுள்ள $2 கட்டுகளை திருடினார். மேலும், $50 தாள்களாக $600 பெறுமானமுள்ள ரொக்கம், பல்வேறு நாட்டு நாணயங்களாக $5,900 பெறுமானமுள்ள ரொக்கத்தையும் திருடினார்.

வீட்டில் கட்டுக்கட்டாக வைத்திருந்த பணம் காணாமல் போனதை அறிந்ததும் சுமார்மியின் குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!