ஆப்கானிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்குசிங்கப்பூர் $50,000 நன்கொடை

ஆப்கானிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்குசிங்கப்பூர் $50,000 நன்கொடை

கோப்புப் படம்: ஏஎஃப்பி

20 May 2024 - 8:26 pm

1 mins read

காபூல்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 50,000 வெள்ளியை நன்கொடை வழங்கியுள்ளது.

அதே சமயத்தில் அந்நாட்டின் நிவாரணம், மீட்புப் பணிகளுக்கு உதவ நிதி திரட்டும் வேண்டுகோளை அது விடுத்துள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும். உணவு, அவசரகால முகாம், அவசரகால மனநலப் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதி தேவைப்படுவதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் மே 20ஆம் தேதி கூறியது.

செஞ்சிலுவைச் சங்க செம்பிறை தலைமையில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை மேம்படுத்தவும் திரட்டப்படும் நிதி உதவும் என்று சங்கம் மேலும் கூறியது.

ஆப்கன் செம்பிறைச் சங்கம், அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சமூகம் உள்ளிட்ட பங்காளி அமைப்புகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் வருத்தமடைகிறோம் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெஞ்சமின் வில்லியம் கூறினார்.

வீடுகளும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் வேளையில் உதவி தேவைப்படும் சமூகத்திற்கு சிங்கப்பூர் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்