சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் குறைந்தது

1 mins read
08948622-cfb6-4d8e-90a4-4829e258e717
சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் குறைந்தது. - படம்: சாவ்பாவ்

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஒரு விழுக்காடு குறைந்து $92,700ஆகப் பதிவானது.

மாறாக, பெரிய கார்களுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது.

பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் முந்தைய ஏலக்குத்தகையில் $105,002ஆகப் பதிவானது.

இது தற்போது 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெரிய கார்களுக்கான தற்போதைய வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $105,689.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு $104,689ஆக இருந்தது.

இது தற்போது $105,002ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களுக்கும் பொதுப் பிரிவைப் பயன்படுத்தலாம். ஆனால் அது பெரும்பாலும் பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 2.9 விழுக்காடு அதிகரித்து $72,001ஆக ஏற்றம் கண்டது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 2 விழுக்காடு குறைந்து $9,503ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்