மே இறுதிவரை இடியுடன் மழை, மிதமான வெப்பம்

மே இறுதிவரை இடியுடன் மழை, மிதமான வெப்பம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 May 2026 - 8:13 pm

1 mins read

சிங்கப்பூரின் சில பகுதிகளில் இந்த மாதத்தின் எஞ்சிய நாள்களில் இடியுடன் கூடிய குறுகியநேர மழை பெய்யும் என்றும் மிதமான வெப்பம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.

பெரும்பாலும் பிற்பகலில் இடியுடன் பெய்யும் மழை அவ்வப்போது மாலை நேரம் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இரண்டாம் பாதி வெப்பமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாரங்களில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு நீண்டகால சராசரிக்கு நெருக்கமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தனது முன்னுரைப்பில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்