மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்ட மின்வர்த்தகத் தளங்களின் பட்டியலில் டிக்டாக் ஷாப் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மின்வர்த்தகச் சந்தைப் பரிவர்த்தனை பாதுகாப்பு தரவரிசையில் டிக்டாக் முதல்முறையாகச் சேர்க்கப்பட்டது.
ஒவ்வொரு மின்வர்த்தகத் தளத்துக்கும் ஒன்றிலிருந்து நான்கு புட்குறிகள் வரை போடப்படும். அதில் நான்கு புட்குறிகள் பெறும் தளம் ஆக பாதுகாப்பானதாக வகைப்படுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட குறியீட்டுப் பட்டியலில், துணிமணியிலிருந்து மின்சாதனங்கள் வரை விற்பனை செய்யும் டிக்டாக் ஷாப் தளம் நான்கு புட்குறிகளைப் பெற்றது. அமேசான், லஸாடா, ஷாப்பி ஆகியவற்றுக்கும் நான்கு புட்குறிகள் வழங்கப்பட்டன.
மோசடிகளைக் களைவதற்கான அமைச்சுகளுக்கு இடையிலான குழு அந்த மதிப்பீட்டை வழங்குகின்றன. உள்துறை அமைச்சு, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம், வர்த்தக, தொழில் அமைச்சு ஆகிய அரசாங்க அமைப்புகள் மோசடிகளை முறியடிக்க 2020ல் ஒன்றிணைந்து குழுவை அமைத்தன.
ஆக அண்மைய மதிப்பீட்டில் உள்துறை அமைச்சு முக்கியமாகக் கருதும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் டிக்டாக் ஷாப் தளம் பின்பற்றியது.
பட்டியலில் ஆகக் கடைசி இடத்தைப் பிடித்தது மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ் தளம். கடந்த ஆண்டு புகாரளிக்கப்பட்ட 11,665 இணைய மோசடிகளில் மூன்றில் ஒரு பங்கு ஃபேஸ்புக் மூலம் நடந்தது.
அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் கட்டணம் செலுத்திய பிறகு பொருளையோ சேவையையோ பெறவில்லை.
தொடர்புடைய செய்திகள்
கெரோசல் நிறுவனத்துக்கு இரண்டு புட்குறிகள் கிடைத்தன.