ஆல்ஃபா எனர்ஜியின் ரகசியத் தகவலைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் அபராதம் விதித்தன.
யூஜின் ஆங் யூ ஜின்னுக்கு $137,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கை ஏதும் இல்லாமல் அபராதத் தொகையை ஆங் செலுத்திவிட்டார்.
பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படாத தகவல் தம்மிடம் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதியன்று தமது பெற்றோரின் வர்த்தகக் கணக்குகளில் இருந்த 2,413,300 ஆல்ஃபா எனர்ஜி பங்குகளை ஆங் விற்றார்.
இதன் விளைவாக, ஏறத்தாழ $54,900 இழப்பை அவரது பெற்றோர் தவிர்த்தனர்.

