மலேசியக் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்ப்பு

மலேசியக் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்ப்பு

படம்: சமூக ஊடகம்

29 Nov 2026 - 7:16 pm

1 mins read

செம்பவாங் சாலைக்கும் ஈசூன் அவென்யூ 3க்கும் இடைப்பட்ட சந்திப்பில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து 44 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (நவமபர் 28) காலை 6.35 மணியளவில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காரும் ஆடவர் ஓட்டிய வேன் விபத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட ஹோண்டா காரின் இடது பயணியின் முன்னிருக்கைக் கதவு சேதமடைந்திருந்ததைக் காண முடிந்தது.

வேனின் முன் இடது பகுதியும் சேதமடைந்திருந்தது.

சம்பவத்தை அடுத்து 44 வயது வேன் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, அந்த ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.

ஹோண்டா காரின் 31 வயது ஓட்டுநர் அதிகாரிகளின் விசாரணையில் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்