இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுகளுக்காக நீண்ட வரிசை

1 mins read
31f00a61-6e60-4d70-8bc5-11506b4e3998
இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் திரைப்படப் பிரியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

திரைப்படப் பிரியர்கள், ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியர் திரையரங்கில் திங்கட்கிழமை (மார்ச் 27) காலை நீண்ட வரிசை பிடித்து காத்திருந்தனர்.

ஷா பிளாசாவில் மறுசீரமைக்கப்பட்ட திரையரங்கு வியாழக்கிழமை திறக்கப்படுவதை முன்னிட்டு, 350 ஜோடி இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் முந்தினர்.

நுழைவுச்சீட்டு விநியோகம் காலை 10 மணிக்கு தொடங்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலாமவர் காலை 7.45 மணிக்கெல்லாம் வரிசையில் நின்றுவிட்டார். முற்பகல் 11.30 மணிக்கெல்லாம் 350 ஜோடி திரைப்பட நுழைவுச்சீட்டுகளும் தீர்ந்துபோயின.

இந்தத் திரையரங்கில் 11 அரங்குகள் உள்ளன. சிங்கப்பூரில் ஒரே இடத்தில் இங்குதான் ஆக அதிக திரைப்பட அரங்குகள் உள்ளன.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) 350 ஜோடி இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுகள் கொடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. புதன்கிழமை 150 ஜோடி நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படும்.

திங்கள், செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட இலவச நுழைவுச்சீட்டுகளை அன்றைய நாளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

புதன்கிழமை வழங்கப்படும் நுழைவுச்சீட்டுகளை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

2022ல் வெளியான Marvel Studios' Thor: Love And Thunder, Bullet Train, Elvis and Ticket To Paradise போன்ற ஆங்கில திரைப்படங்கள் இந்த மூன்று நாள்களில் திரையிடப்படுகின்றன.