தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறந்தது ‘ஸூம்’

1 mins read
87da3bbf-150d-4ca0-ac64-9445be26a088
சிங்கப்பூரில் ஸூம் அலுவலகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரபல காணொளிச் சந்திப்புத் தளமான ‘ஸூம் கம்யூனிகேஷன்ஸ்’ சிங்கப்பூரின் மரினா பே வட்டாரத்தில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

ஐஓஐ சென்ட்ரல் பொலிவார்ட் கட்டடத்தின் 24வது தளத்தில் ஏறத்தாழ 7,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அந்த அலுவலகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) திறக்கப்பட்டது. வரும் திங்கட்கிழமை முதல் அங்கு ஊழியர்கள் பணியாற்றத் தொடங்குவார்கள்.

தனது ஆசிய-பசிபிக் வட்டார விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் அலுவலகத்தை ஸும் திறந்துள்ளது.

சிங்கப்பூரில் தனது தரவு உள்கட்டமைப்பை அந்நிறுவனம் அண்மையில் விரிவாக்கியது.

“தொழில்சார்ந்த, தொடர்புகளைச் சிறந்த முறையில் ஏற்படுத்தக்கூடிய, தேவையானவற்றை மிக எளிதாகப் பெறக்கூடிய ஒரு இடமே சிங்கப்பூர்.

“இங்கு அலுவலகத்தைத் திறக்காமல் இருந்தால் அது வேடிக்கையாக இருக்கும்,” என்று ஸும் குழுமத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய பகுதிகளுக்கான தலைமை அதிகாரி ஸ்டீவ் ராஃபர்டி கூறியுள்ளார்.

ஸூம் குழுமத்தில் உலகம் முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களில் பாதிப்பேர் அமெரிக்காவுக்கு வெளியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்