ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

திருக்­கு­றளை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­துள்ளார் எழுத்­தா­ள­ரும் கவி­ஞ­ரும் படைப்­பா­ள­ரு­மான தாமஸ் ஹிட்­டோஷி புருக்ஸ்மா (படம்).

அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­ ஜப்பானியரான அவர், ஆங்­கி­லத்­தில் விளக்க உரையுடன் கூடிய 'த குறள்: திரு­வள்­ளு­வர்ஸ் திருக்­கு­றள்' எனும் நூலை இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் வெளி­யிட்டார்.

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நான்கு நேரடி நிகழ்­ச்சி­களில் கலந்­து­கொண்டு, ஔவை­யார், திரு­வள்­ளு­வர் ஆகியோர் குறித்தும் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

ஆங்­கி­லம், ஸ்பானிய மொழிகளுடன் இரு­பது ஆண்­டு­களுக்கு முன் மது­ரை­யில் சில ஆண்­டு­கள் வாழ்ந்தபோது தமிழ்­மொ­ழி­யையும் அவர் கற்­றுக்­கொண்டார்.

பேச்சுத் தமி­ழோடு எழுத்துத் தமிழையும் பயின்ற தாமஸ், தமிழ் இலக்­கி­யங்களிலும் ஆர்வம் காட்டினார். அவ­ரது தமிழ்­மொழி கற்­றல் பய­ணத்­தில் உறு­து­ணை­யாக இருந்­தார் மது­ரை­யைச் சேர்ந்த முனை­வர் கு. வே ராம­கோடி.

திருக்­கு­ற­ளின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பு­கள் திருக்­கு­ற­ளைப் போன்ற ஒரு கவி­தா­னு­ப­வத்­தைத் தர­வில்­லை என்ற குறையை உணர்ந்ததாகக் கூறும் தாமஸ், ஏறத்­தாழ பதி­னைந்து ஆண்­டு­களுக்கு முன்­னரே திருக்­கு­றளை ஆங்கிலத்தில் மொழி­பெ­யர்க்கத் திட்டமிட்டதாகக் கூறினார்.

"திருக்­கு­ற­ளில் என்னை மிக வும் ஈர்த்­தது, திரு­வள்­ளு­வரின் வார்த்­தை­ விளையாட்டுதான். அவரது கவி­ந­ய­மும் சொல் தெரி­வு­களும் சந்த ந­ய­மும் வியக்­கத்­தக்­கவை. அதே சுவையை இன்­றைய நவீன ஆங்­கி­லத்­தில் கொண்டுவரு­வ­தற்கு முயற்சி செய்­துள்­ளேன்," என்­றார் அவர்.

மண்­ணைப் போற்­றுதல், விருந்­தோம்புதல் போன்ற தமி­ழர் பண்­பாட்டுக்கூறு­க­ளைப் புரிந்துகொள்ள தாமசுக்கு திருக்­கு­றள் ஒரு வாய்ப்பாக அமைந்­தது. தத்­துவ அடிப்­ப­டை­யில் திருக்­கு­றளை ஆராய்ந்த அவ­ருக்கு, அதன் கருத்துச் செறிவு வியப்­பூட்­டி­யது. மணக்­கு­ட­வர், பரி­மே­ல­ழ­கர் ஆகி­யோ­ரின் உரை­கள் அவ­ரது புரி­த­லுக்குக் கைகொ­டுத்­தன.

"விருந்­தோம்­பல் அதி­கா­ரம் என் மனத்­துக்கு நெருக்­க­மா­னது. விருந்­தி­னர்­களை நடத்­தும் முறையை மட்­டு­மன்றி, அவர்­க­ளி­டம் பேசு­வது எப்­படி என்­ப­தை­யெல்­லாம் இந்த அதி­கா­ரம் எடுத்­து­ரைக்­கிறது," என்­றார் தாமஸ்.

நீதி­நூ­லான திருக்­கு­றளை அணு­கு­வ­தற்­குப் பலர் தயங்­கக்­கூ­டும் என்று கூறிய அவர், திருக்­கு­ற­ளின் கருத்­து­கள் அனைத்­தும் சமூ­கத்­தின் பல்­வேறு பிரி­வி­ன­ருக்­கும் எல்லாக் கா­லத்­துக்­கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கின்­றது எனக் குறிப்­பிட்­டார்.

"நாம் எவ்­வாறு திருக்­கு­ற­ளின் கருத்­து­களை வாழ்­வி­ய­லுக்கு பொருத்­திப் பார்க்­கி­றோம் என்­பதே முக்­கி­யம்," என்­ற தாமஸ், ஔவையார் பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஆண்­டா­ளின் திருப்­பா­வை­ நூலை ஆங்­கி­லத்­தில் மொழி­பெயர்த்­து அடுத்த ஆண்டு இவர் வெளி­யி­ட­ உள்­ளார்.

 

செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!