2025 ‘சீ கேம்ஸ்’: பூப்பந்தில் பதக்கத்தை உறுதிப்படுத்திய ஆடவர் அணி

1 mins read
b8d5d505-dd56-4bd6-9baa-5be06eb7fa11
காலிறுதிப் போட்டிகள் தொடங்குவதற்குமுன் புகைப்படம் எடுத்துகொண்ட சிங்கப்பூர்ப் பூப்பந்தாட்ட ஆடவர் குழுவினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) பூப்பந்துப் போட்டிகள் ஆடவர் குழுப் பிரிவில் சிங்கப்பூருக்குப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

ஏற்கெனெவே, பெண்கள் பூப்பந்தாட்ட அணி பதக்கம் வெல்வதை நிச்சயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) நடந்த ஆட்டத்தில் லாவோஸ் அணியை 3-0 எனும் ஆட்டக் கணக்கில் சிங்கப்பூர் ஆடவர் அணி வீழ்த்தியது.

மூன்றாம், நான்காம் இடத்துக்குப் போட்டி கிடையாது என்பதால் குறைந்தது வெண்கலப் பதக்கம் சிங்கப்பூருக்கு உறுதியானது

திங்கட்கிழமை (டிசம்பர் 8) சிங்கப்பூர் ஆடவர் அணி அரையிறுதிச் சுற்றில் இந்தோனீசியாவையும் பெண்கள் அணி தாய்லாந்தையும் சந்திக்கும்.

2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் பூப்பந்து அணியினர் குழுப் பிரிவிலும் இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்