இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்

1 mins read
b632aa89-a5a2-4cc2-8d22-03a4e18b4902
ஏற்கெனவே பெர்த் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜோஷ் ஹேசில்வுட் விலகல் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, ஜோஷ் ஹேசல்வுட் விலகலால் மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெர்த் டெஸ்ட்டிலும் இவர், இந்தியா 150 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளை இழந்த முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ஹேசல்வுட்டுக்குப் பதிலாக இதுவரை ஒருநாள் மற்றும் டி20 அனைத்துலகப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஷான் அபட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் 30 வயது வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாக்கெட் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 40 முதல் தரப் போட்டிகளில் குவீன்ஸ்லாந்து அணிக்காக 142 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்