கபடியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு வெண்கலம்

2 mins read
bf82da0d-f94a-4402-8491-bc9e14fa2b72
அணிக்கு எழுவர் பிரிவில் வெண்கலம் வென்ற பெண்கள் கபடி அணி. - படம்: திவ்யா அழகப்பன்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில், ‘அணிக்கு எழுவர்’ பிரிவில் சிங்கப்பூரின் ஆண்கள், பெண்கள் அணிகள் இரண்டும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளன.

டிசம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற போட்டிகளில், திமோர் லெஸ்டே, மியன்மார் இரு அணிகளையும் சிங்கப்பூர் வீழ்த்தியது. திமோர் லெஸ்டே உடன் 77-19 எனக் கிடைத்த வெற்றி, இதுவரைத் தேசிய அணி பெற்றுள்ள ஆக அதிகப் புள்ளி வித்தியாசத்திலான வெற்றி.

அந்த வெற்றி உட்பட, மொத்தம் நான்கு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

ஆண்கள் அணித் தலைவரும் தற்காப்பு ஆட்டக்காரருமான வி‌ஷ்வ தேவா, முன்னிலை ஆட்டக்காரர்களான அன்பு நவின், ராஜா ஸ்ரீராம் ஆகியோர் ஆக அதிகப் புள்ளிகள் பெற்றுத் தேசிய சாதனைகளைப் படைத்தனர்.

பெண்கள் அணி, அதைவிட இன்னும் பலமான, அனுபவமிக்க அணிகளைச் சந்தித்ததால் வெற்றி கிடைக்கவில்லை.

இறுதி ஆட்டத்தில் திமோர் லெஸ்டே அணி பங்கேற்காததால், இரண்டு புள்ளிகள் பெற்று வெண்கலத்தை வென்றது பெண்கள் அணி.

அடுத்தது, ‘அணிக்கு ஐவர்’ விளையாட்டுகள் டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. ஆண்கள் அணி, முதல் ஆட்டத்தில் மியன்மாரை 43-21 என வீழ்த்தியது. பெண்கள் அணி, முதல் ஆட்டத்தில் தாய்லாந்திடம் 7-39 எனும் புள்ளிக் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.

“முன்னிலை ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் அன்பு நவின், கோகுல் கண்ணன் சிறப்பாக விளையாடினர், தற்காப்பில் ராஹுல் சாய் நிக்கிலே‌ஷ் சிறப்பாக ஆடினர்,” என்றார் பயிற்றுவிப்பாளர் சிவநேசன்.

பெண்கள் அணிக்குத் தனுஸ்ரீ தலைமைதாங்குகிறார்.

‘அணிக்கு மூவர்’ விளையாட்டுகள், டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.

https://wrs.gmsmate.com/seagames2025/schedule-results இணையத்தளத்தில் விளையாட்டுகளை நேரடியாகப் பின்தொடரலாம்.

அணிக்கு எழுவர் பிரிவில் வெண்கலம் வென்ற ஆண்கள் கபடி அணி.
அணிக்கு எழுவர் பிரிவில் வெண்கலம் வென்ற ஆண்கள் கபடி அணி. - படம்: திவ்யா அழகப்பன்
குறிப்புச் சொற்கள்