நடராஜனின் மகளை கொஞ்சும் டோனி (காணொளி)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் மகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி கொஞ்சி விளையாடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) இரவு சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

அதில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு டோனி முன்னாள் வீரர்களான பிரையன் லாரா, டேல் ஸ்டைன், முத்தையா முரளிதரன் உள்ளிட்டவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு தமிழ்நாடு வீரர் நடராஜனின் குடும்பத்தினரை டோனி சந்தித்தார். 

அப்போது நடராஜனின் மகளுடன் தோனி கொஞ்சி கொஞ்சிப் பேசினார், சிறிது நேரம்  அவர் விளையாடவும் செய்தார். பார்க்க அழகாக இருந்த அந்தக் காணொளியை டோனியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். 

நடராஜன் குடும்பத்தினர் டோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் காணொளியில் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!