பேங்காக்: ஆண்களுக்கான ஒரு மீட்டர் ஸ்பிரிங்போர்ட் பிரிவில் 370.35 புள்ளிகளுடன் தங்கம் வென்றதன் மூலம், 60 ஆண்டுகளில் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் முக்குளிப்புப் போட்டியில் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று அவ்வீர் தாம் பெற்றார்.
1965ஆம் ஆண்டு ஹுய் பெங் செங் ஆண்களுக்கான ஸ்பிரிங்போர்ட் முக்குளிப்பில் தங்கம் வென்ற பிறகு, சிங்கப்பூரிலிருந்து அவ்வாறு செய்யும் முதல் முக்குளிப்பு வீரர் 21 வயது அவ்வீர் ஆவார். 2022ஆம் ஆண்டு வியட்னாமில் இதே போட்டியில் அவ்வீர் வெள்ளி வென்றிருந்தார்.
அவ்வீர் தாமின் 18 வயது சக வீரர் மேக்ஸ் லீயும் அசம்ப்ஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் ஒன்பது வீரர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார். அவர் பெற்ற 319.35 புள்ளிகள் அவரது தனிச்சிறப்பு சாதனையாகும்.
2017ஆம் ஆண்டு ஆஷ்லீ டான், ஃபாங் கே யியன் இணை, பெண்களுக்கான மூன்று மீட்டர் ஒருங்கிணைந்த ஸ்பிரிங்போர்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு, சிங்கப்பூரின் முதலாவது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் முக்குளிப்பு இதுவாகும்.

