எதிர்காலம் பிரகாசமானது: மேன் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா

எதிர்காலம் பிரகாசமானது: மேன் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா

2 mins read
88f9e618-d2aa-4504-a02a-cef8f4322471
எஃப்ஏ கிண்ணத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிமியர் லீக் பட்டம் அவர்களின் கையை விட்டு நழுவிப் போயிருக்கலாம், ஆனால் பெப் கார்டியோலாவைப் பொறுத்தவரை, மே 16ஆம் தேதியன்று நடந்த எஃப்ஏ கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியில் செல்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்நாட்டுக் கிண்ணங்களை வென்று இரட்டை வெற்றியைப் பதிவுசெய்த மான்செஸ்டர் சிட்டியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

லீக் பட்டத்திற்கான போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், 12 மாதங்களுக்கு முன்பு 2024-25 பருவத்தை எந்தக் கிண்ணமுமின்றி முடித்ததை விட, சிட்டி இப்போது சிறந்த நிலையில் இருப்பதாக அந்த ஸ்பானிய நாட்டவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

சிட்டியின் எட்டாவது எஃப்ஏ கிண்ண வெற்றியை உறுதிசெய்த 72வது நிமிட கோலை அடித்த அன்டோயின் செமென்யோ மற்றும் ஜனவரி பரிமாற்ற காலத்தின்போது இணைந்த மார்க் குஹி ஆகியோரின் முக்கியப் பங்களிப்புகள், மேத்யூஸ் நூன்ஸ், அப்துகோதிர் குசானோவ், நிக்கோ ஓ’ரெய்லி ஆகியோரின் வளர்ச்சி, அடுத்த பருவத்தில் சிட்டி மீண்டும் முதலிடத்திற்குத் திரும்ப முடியும் என்பதைக் காட்டுவதாக கார்டியோலா நம்புகிறார்.

“நிறைய புதிய வீரர்கள், காயமடைந்த வீரர்கள் இருந்தனர். சில சமயங்களில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். ஆனால், மிக உயர்ந்த போட்டி என்பது நமக்காகக் காத்திருக்காது.

“சாம்பியன்ஸ் லீக்கில், ரியால் மட்ரிட் என்ற மிக மிகச் சிறந்த எதிரணியிடம் நாங்கள் தோற்றோம். ஆனால் மற்ற போட்டிகளில் நாங்கள் அசாதாரணமாக செயல்பட்டோம்இ” என்றார் கார்டியோலா.

கார்டியோலா இந்தப் பருவத்தின் முடிவில் சிட்டியை விட்டு வெளியேறக்கூடும் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் ஊகித்து வருகின்றன. இருப்பினும் 55 வயதான அவர், தனது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டுக் காலம் மீதமுள்ளதாகக் கூறியுள்ளார்.

செல்சி நிர்வாகியான ஸாபி அலோன்சோ

முன்னாள் ரியால் மட்ரிட் நிர்வாகி ஸாபி அலோன்சோ, செல்சி அணியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த அணி ஞாயிற்றுக்கிழமையன்று (மே 17) இன்ஸ்டகிராம் பதிவில் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் லியாம் ரோசெனியர் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு பொறுப்பேற்ற செல்சியின் இடைக்கால நிர்வாகி காலும் மெக்ஃபார்லனுக்குப் பதிலாக, இந்த ஸ்பெயின் நாட்டவர் ஜூலை 1ஆம் தேதி முதல், நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் பொறுப்பேற்பார்.

குறிப்புச் சொற்கள்
போட்டிவளர்ச்சிமான்செஸ்டர் சிட்டி

தொடர்புடைய செய்திகள்