ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதலில் லோ ஜியாங் ஹாவ்வுக்குத் தங்கம்

1 mins read
1aae4e21-5a8a-47b8-b010-44c7553c56b8
தாய்லாந்தில் நடைபெறும் 2025 ‘சீ’ விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதலில் சிங்கப்பூரின் லோ ஜியாங் ஹாவ் தங்கப் பதக்கம் வென்றார். - படம்: ஸ்போர்ட்எஸ்ஜி

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று, ‘சீ’ விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி நீண்டகாலப் பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆண்களுக்கான ஷாட்கன் ஸ்கீட் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் லோ ஜியாங் ஹாவ் 51 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் சிங்கப்பூரைச் சேர்ந்த வீரரான பீட்டர் லீ, கடைசியாக 1993ஆம் ஆண்டு, ஓப்பன் களிமண் இலக்கு ஸ்கீட்டில் தங்கம் வென்றார்.

ராட்சபுரியில் உள்ள போட்டாராம் துப்பாக்கிச் சுடுதல் வளாகத்தில், லோ 51 புள்ளிகளைப் பெற்று பிலிப்பீன்சின் என்ரிக் லியாண்ட்ரோ என்ரிக்வெசை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

31 வயதான லோ, சொந்த மண்ணில் 2015ஆம் ஆண்டு நடந்த ஸ்கீட் போட்டியில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

2017ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ‘சீ’ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

குறிப்புச் சொற்கள்