லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ஸ்காட்லாந்துக் காற்பந்துக் குழுவின் முன்னாள் நட்சத்திர வீரர் டெனிஸ் லா வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) காலமானார்.
அவருக்கு 84 வயது.
டெனிஸ் லாவை அவரது ரசிகர்கள் ‘தி கிங்’ என்று மிகுந்த பெருமையுடன் அழைத்தனர்.
1968ஆம் ஆண்டில் ஐரோப்பியக் கிண்ணத்தை மான்செஸ்டர் யுனைடெட் வென்றது.
அந்தக் குழுவில் டெனிஸ் லா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் காயம் காரணமாக இறுதி ஆட்டத்தில் அவர் களமிறங்கவில்லை.
ஸ்காட்லாந்துக் காற்பந்துக் குழுவுக்காக டெனிஸ் லா 55 முறை விளையாடியுள்ளார்.
ஸ்காட்லாந்துக்காக ஆக அதிகமான கோல்களைப் போட்டவர்கள் பட்டியலில் டெனிஸ் லாவும் கென்னி டால்கிலிஷும் இணைந்து முதலிடத்தில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
1964ஆம் ஆண்டில் ‘பலோன் டி ஓர்’ விருது டெனிஸ் லாவுக்கு வழங்கப்பட்டது.
அந்த விருதை வென்ற ஒரே ஸ்காட்லாந்து வீரர் எனும் பெருமை அவரைச் சேரும்.
அவரது மரணம் காற்பந்து உலகை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
டெனிஸ் லாவின் குடும்பத்தினருக்குக் முன்னாள், இந்நாள் காற்பந்து வீரர்களுடன் காற்பந்து குழுக்களும் அவற்றின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

