4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை

1 mins read
f5d260c9-d158-4c27-a4fc-02229c9b4556
புதிய தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ள (இடமிருந்து) சிங்கப்பூரின் லாவினியா ஜெய்காந்த், எலிசபெத்-ஆன் டான், கெர்ஸ்டின் ஓங், சாந்தி பெரேரா. - படம்: பெரித்தா ஹரியான்

பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்காக 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களை, இரண்டு ‘சீ’ விளையாட்டுகளில் தொடர்ந்து வென்று வரலாறு படைத்த பிறகு, ஓட்ட வீராங்கனை சாந்தி பெரேரா, திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று 4x100 மீட்டர் தொடர் ஓட்ட பெண்கள் அணியை புதிய தேசிய சாதனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மே மாதம் தென்கொரியாவின் குமி நகரில் நடந்த 2025 ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டியில் நான்காவதாக வந்து 44.66 வினாடி என்ற புதிய தேசிய சாதனையை கெர்ஸ்டின் ஓங், எலிசபெத்-ஆன் டான், லாவினியா ஜெய்காந்த், சாந்தி பெரேரா ஆகியோர் ஏற்படுத்தினர்.

டிசம்பர் 15ஆம் தேதி சுப்பசலாச்சாய் தேசிய விளையாட்டரங்கில் இந்த அணி 4 x 100 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் 4வது நிலையில் 44.41 வினாடியில் போட்டியை முடித்து, ஒரு புதிய தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து 43.99 வினாடியில் முதலிடத்தையும், வியட்னாம் 43.91 வினாடியில் இரண்டாம் இடத்தையும், பிலிப்பீன்ஸ் 43.97 வினாடியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

குறிப்புச் சொற்கள்