சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை குவா திங் வென் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (சீ கேம்ஸ்) புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
சனிக்கிழமை (டிசம்பர் 13) நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.
இதன்மூலம் தென்கிழக்காசியப் போட்டிகளில் 63 பதக்கங்களை வென்று ஆக அதிகப் பதக்கங்களை வென்ற விளையாட்டாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை ஜாசலின் இயோ இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் 62 பதக்கங்கள் வென்றுள்ளார்.
33 வயதான குவா, 21 ஆண்டுகளாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவர் 2005ஆம் ஆண்டு பிலீப்பீன்சில் நடந்த போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை குவா 35 தங்கம், 22 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

