சீ கேம்ஸ்: 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் சாந்தி பெரேரா

1 mins read
6d01bd49-9ab5-46c6-a66a-ad983e131aef
சாந்தி பெரேரா, 23.05 வினாடியில் பந்தயத்தை முடித்தார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பேங்காக்கின் சுப்பாச்சலாசாய் தேசிய விளையாட்டரங்கில் பந்தயம் சனிக்கிழமை (டிசம்பர் 13) இரவு நடந்தது.

சாந்தி பெரேரா, 23.05 வினாடியில் பந்தயத்தை முடித்தார்.

வியட்னாமின் லே தி கேம் து இரண்டாவது இடத்தில் வந்தார் (23.14). மூன்றாவது நிலையில் பிலிப்பீன்சின் ஜியோன் நெல்சன் (23.50) வந்தார்.

29 வயதான சாந்தி பெரேரா, தொடர்ந்து இரண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இச்சாதனையைச் செய்யும் முதல் சிங்கப்பூரர் இவர்.

டிசம்பர் 11ஆம் தேதி சாந்தி பெரேரா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 11.37 வினாடியில் அவர் பந்தயத்தை முடித்தார்.

டிசம்பர் 15ஆம் தேதி சாந்தி பெரேரா பெண்கள் 4x100மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்