பேங்காக்: இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) ஆண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் சிங்கப்பூர் வாகை சூடியுள்ளது.
திங்கட்கிழமை (டிசம்பர் 15) நடந்த ஆண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் சிங்கப்பூரின் கெல்வின் குவெக் தங்கம் வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 50.27 வினாடி.
வியட்னாமின் கையன் டுக் சொன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெண்கலமும் வியட்னாமுக்குச் சென்றது. அந்நாட்டின் லெ குவோக் ஹுன் வெண்கலம் வென்றார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இப்போட்டியில் சிங்கப்பூர் கடைசியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் வென்றது. கடைசியாக 1965ஆம் ஆண்டு எம் குணசேனா வாகை சூடினார்.

