பேங்காக்: பேங்காக்கில் புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று நடந்த பெண்களுக்கான இரட்டையர் உருட்டுப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் ஏரியன் டே, சார்மெய்ன் சாங் இணை தங்கம் வென்றது. அவர்கள் இந்தோனீசிய இணையினரான அலிஷா லாரசாட்டி, புட்டி ஆர்மீனை 379-353 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினர்.
டே மற்றும் சாங் முறையே 188, 191 புள்ளிகள் எடுத்து அலிஷா (160) மற்றும் புட்டி (193) ஆகியோரை வென்றனர்.
இந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளின் உருட்டுப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் பெறும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
டிசம்பர் 15 அன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாங் வெற்றி பெற்று தனது முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
நால்வர் கொண்ட அணி பிரிவில், 2023 தென்கிழக்காசிய போட்டிகளில் வென்ற தங்கத்தைத் தக்கவைக்க சிங்கப்பூர் குழுவினர் டிசம்பர் 18 அன்று மீண்டும் களமிறங்குவார்கள்.

