பேங்காக்: தாய்லாந்தில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர், கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டியில் தங்கம் வென்றுள்ளது. கடைசியாக 2021ஆம் ஆண்டு வியட்னாமில் நடந்த போட்டிகளில் இதே விளையாட்டில் சிங்கப்பூர் தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்த முறை, தாய்லாந்து தலைநகரில் உள்ள ‘சென்ட்ரல் வெஸ்ட்கேட் மால்’ விளையாட்டரங்கில் செங் சியான், கோயன் பாங் இருவரும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் மலேசியாவின் வொங் கீ ஷென், டீ அய் ஷின் இணையை 11-6, 11-7, 11-2 எனும் ஆட்டக் கணக்கில் வாகை சூடினர்.
சிங்கப்பூர் மேசைப்பந்து இணை, உலகத் தரவரிசையில் 56வது இடத்தில் உள்ளனர்.

