நெஞ்சு நீச்சலில் மும்முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை சிங்கப்பூரின் லெட்டி‌ஷியா சிம்

1 mins read
e5c80f76-a9f4-4cc5-b3cf-04a88b53c2e5
சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை 22 வயது லெட்டி‌ஷியா சிம். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை லெட்டி‌ஷியா சிம், நெஞ்சு நீச்சல் (breaststroke) வீராங்கனை என்ற பட்டத்தை மூன்றாவது முறை வென்றுள்ளார். நெஞ்சு நீச்சல் வீராங்கனை என்ற பட்டத்தை மூன்று முறை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.

தாய்லாந்தில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், 200 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் முதலாவது நபராக நீந்தி முடித்தார் சிம், 22. இவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 27.37 வினாடிகள்.

இவரைத் தொடர்ந்து தாய்லாந்தின் பிம்‌‌சானொக் சின்வீரா இரண்டாவது இடத்திலும் இந்தோனீசியாவின் அடெலியா மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

நெஞ்சு நீச்சல் போக, பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை சிம் தக்கவைத்துக்கொண்டார்.

இதற்கிடையே, சிங்கப்பூரின் டியோங் சென் வெய் ஆண்களுக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலை 23.24 வினாடிகளில் முடித்து முதலிடம் பிடித்தார்.

குறிப்புச் சொற்கள்