எஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்

விருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த விளையாட்டு வீரர் விருதைத் தேசிய உருட்டுப் பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ வென்றுள்ளார். ஆண்களுக்கான உலக உருட்டுப்பந்து வெற்றியாளர் போட்டியில் சிங்கப்பூர் குழு தங்கப் பதக்கம் வென்றதற்கு 24 வயது முகம்மது ஜாரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். 
ஷங்ரிலா ஹோட்டலில் நடை பெற்ற விருது வழங்கும் நிகழச்சி நேற்று நடைபெற்றது.
இதில் 180 பேர் கலந்து கொண்டனர். கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூவிடமிருந்து முகம்மது ஜாரிஸ் விருதைப் பெற்றுக்கொண்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த இளம் விளையாட்டு வீரர் விருதை செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர் நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவரான 16 வயது ஷான் சீ தட்டிச் சென்றார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’