உலகக் கிண்ணம் 2022: முதன்முறையாக பெண் நடுவர்

உலகக் கிண்ணம் 2022: முதன்முறையாக பெண் நடுவர்

30 Nov 2022 - 7:13 pm

1 mins read

மூன்று பெண்கள் உள்ளடக்கிய குழு ஒன்று முதன்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நடுவர்களாக பொறுப்பேற்பர். நாளை நடக்கவிருக்கும் ஜெர்மனிக்கும் கோஸ்டா ரிக்காவுக்கும் இடையே நடக்கும் ஆட்டத்தில் அவர்கள் நடுவர்களாகப் பணியாற்றுவர்.

பிரான்சை சேர்ந்த Stephanie Frappart என்பவர் உலக் கிண்ண ஆண்கள் போட்டியில் நடுவராக பணியாற்றவிருக்கும் முதல் பெண். அவருடன் பிரேசில் நாட்டின் Neuza Back, மெக்சிகோவின் Karen Diaz Medina ஆகியோரும் துணை நடுவர்களாக இருப்பர்.

இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் முக்கிய நடுவராக பணியாற்ற 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் பெண்கள்.