தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலின் யூரோ கிண்ண தகுதி ஆட்டம் ஒத்திவைப்பு

1 mins read
77391235-3f99-48ca-b639-1a874aeac8b8
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் சில நாள்களுக்கு முன் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலில் போர் சூழல் எழுந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: இஸ்ரேலின் யூரோ 2024 கிண்ணத் தகுதி ஆட்டங்களை நவம்பர் 15ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக ஐரோப்பிய காற்பந்து சங்ககூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் சில நாள்களுக்கு முன் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலில் போர் சூழல் எழுந்தது.

வியாழக்கிழமை இஸ்ரேல் அதன் தலைநகர் டெல் அவிவ்-இல் சுவிட்சர்லாந்து அணியுடன் விளையாடவிருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட ஆட்டத்தின் தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சங்ககூட்டமைப்பு தெரிவித்தது.

நிலைமையை அணுக்கமாக கவனித்து வருவதாகவும் அதற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்