சென்னையில் அதிர்ச்சி தர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்

சென்னையில் அதிர்ச்சி தர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்

1 mins read
0c77a9f2-dd93-4f36-a6ab-9016e180c1dd
ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. - படம்: ஏஎஃப்பி

சென்னை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 16வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் புதன்கிழமை மோதுகிறது.

ஆட்டம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அசத்தல் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த அணியின் பந்தடிப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இனி தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி தரக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்