முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலியா

முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலியா

1 mins read
ba30d971-305d-4b52-b206-3b6a70e06b0d
ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.  - படம்: ஏஎஃப்பி

லக்னோ: ஆஸ்திரேலிய அணி இவ்வாண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அதன் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

லக்னோவில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் பந்தடித்த இலங்கை சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. ஒரு கட்டத்தில் 157 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் இழந்து வலுவான நிலையில் இருந்த இலங்கை 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் திணறியது. அவ்வணி 24 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் அதன் பந்தடிப்பாளர்கள் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து, தன் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்