சாதனை அளவாக 1.25 மில்லியன் ரசிகர்கள்

சாதனை அளவாக 1.25 மில்லியன் ரசிகர்கள்

1 mins read
dd0e16f1-7767-4d41-9750-931c11102402
இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் அலை அலையாய் திரண்டனர். - படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது.

இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்திய இந்தியாவைத் தோற்கடித்து கிண்ணம் ஏந்தியது ஆஸ்திரேலியா.

இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகக் கிண்ண ஆட்டங்களை நேரில் காண ஏறத்தாழ 1.25 மில்லியன் ரசிகர்கள் விளையாட்டரங்கங்களில் திரண்டதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 1.016 மில்லியன் ரசிகர்கள் ஆட்டங்களை நேரில் பார்த்ததே ஆக அதிகமாக இருந்தது.

நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா களமிறங்காத முதல் சில ஆட்டங்களில், விளையாட்டரங்கங்களில் பல காலி இடங்கள் இருந்தும் ஒட்டுமொத்த அடிப்படையில் இதற்கு முன் இல்லாத ரசிகர் எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்