மீண்டும் வெற்றிப் பாதையில் லிவர்பூல்

மீண்டும் வெற்றிப் பாதையில் லிவர்பூல்

1 mins read
b9c234b1-3518-44bc-b53f-829fb3936efd
ஃபுல்ஹமுக்கு எதிராக கோல் போட்ட பிறகு கொண்டாடும் ரயன் கிராவன்பார்க் (இடது). - படம்: இபிஏ
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹமை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது லிவர்பூல்.

ட்ரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்ட், ரயன் கிராவன்பார்க், டியோகோ ஜோட்டா ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர்.

தற்போது லிவர்பூலும் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனலும் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளன. அவற்றைவிட ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியிருக்கும் மான்செஸ்டர் சிட்டி 73 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

பிரிமியர் லீக்கில் சென்ற வாரம் கிறிஸ்டல் பேலஸ், லிவர்பூலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. அந்தத் தோல்வி, லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் லிவர்பூலுக்குப் பின்னடைவாக அமைந்தது.

எனினும், ஃபுல்ஹமை வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பித் தனக்கு நம்பிக்கையூட்டிக்கொண்டது லிவர்பூல்.

இந்தப் பருவம், ஆர்சனல், லிவர்பூல், சிட்டி ஆகிய மூன்று குழுக்களும் பிரிமியர் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்