பேங்காக்: தாய்லாந்தின் அரசியார் சுதிடா பஜ்ரசுதாபிமாலாலக்ஷனா, 2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தமது நாட்டைப் பிரதிநிதித்து ஓரு போட்டியாளராகக் களமிறங்கவுள்ளார்.
விஎன்எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தின்படி, அவர் கீல்போட் SSL47 பிரிவு படகோட்டத்தில் பங்கேற்பார்.
தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுகளில் இந்தப் பிரிவு படகோட்டம் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் டிசம்பர் 15 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும்.
அவர் பெரும்பாலும் தமது அணியின் வழிகாட்டியாகச் செயல்படுவார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் தொடக்க விழாவின்போது தாய்லாந்து அணியை அரசி சுதிடா தலைமை தாங்கினார்.
அவர் பல விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடுவதாக அறியப்படுகிறது. நவம்பர் 30 அன்று நடைபெற்ற 21 கி.மீ. தூர அரை மாரத்தான் ஓட்டத்தையும் அவர் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

