யுசிஎல்: இன்ப அதிர்ச்சி தந்தது புரூ‌ஷ்

1 mins read
b10abb04-deb1-4d3b-b756-bb4e6af1c65d
வெற்றியைக் கொண்டாடும் கிளப் புரூ‌ஷ் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

பர்காமோ: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) காற்பந்துப் போட்டியில் பெல்ஜியத்தின் கிளப் புரூ‌ஷ் எதிர்பாரா விதமாக இத்தாலியின் அட்டலான்டாவை வெளியேற்றியுள்ளது.

யுசிஎல் போட்டியின் முதல் சுற்றுக்குப் பிந்திய பிளேயாஃப் சுற்றில் புரூ‌ஷ், அட்டலான்டாவை வென்றது. இச்சுற்றின் முதல் ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்ற புரூ‌ஷ், சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் அட்டலான்டாவை ஊதித் தள்ளியது.

ஒட்டுமொத்தமாக 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது புரூ‌ஷ். இச்சுற்றில் இரண்டு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும்.

சென்ற ஆண்டின் யூயேஃபா யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற அட்டலான்டாவை அபாரமான முறையில் வெளியேற்றியது புரூ‌ஷ்.

முதல் சுற்றுக்குப் பிந்திய பிளேயாஃப் சுற்றின் இதர ஆட்டங்களில் நெதர்லாந்தின் ஃபயனூர்ட், இத்தாலியின் ஏசி மிலானை 2-1 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது; ஜெர்மனியின் பயர்ன் மியூனிக், ஸ்காட்லாந்தின் செல்டிக்கை மொத்தமாக 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது; போர்ச்சுகலின் பென்ஃபீக்கா, பிரான்சின் மொனாக்கோவை மொத்தமாக 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

குறிப்புச் சொற்கள்