தமிழ்நாடு அரசு ஊழியர்க்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்க்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

கோப்புப் படம்: தினமணி

26 Nov 2026 - 7:35 pm

1 mins read

சென்னை: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாள் ‘தந்தையர் மகப்பேறு கால விடுப்பு’ வழங்கி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்குத் தற்போது 365 நாள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இது தாய்மை, குழந்தை நலனுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பேருதவியாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.

அரசுப் பணியாளர்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து இப்புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்கள் தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த 15 நாள் விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பணியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்