3½ ஆண்டுகளில் தமிழகத்தில் 1,670 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

1 mins read
085dbb79-c79c-4e08-ad54-ae1e51a5d4af
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திங்கட்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்ற தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மேலூர் தொகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகள் அமைத்து தர வேண்டும் என்ற கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.

“தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 544 புதிய நியாய விலைக் கடைகளும் 1,126 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1,670 புதிய நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்